RSSAuthor Archive for rusho

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஷாம்

தெலுங்கில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுரேந்தர் ரெட்டியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் ஷாம். சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ஷாம் முதன் முறையாக நடித்த படம் ‘கிக்’ (Kick). தெலுங்குத் திரையுலகில் இந்தப் படம் வெளிவந்து 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரவிதேஜாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு இடைவேளைக்குப் பின் கிடைத்த அந்த வெற்றி தெலுங்குத் திரையுலகிற்கே ஒரு புத்துணர்ச்சி கொடுத்தது என்றே சொல்லலாம். பிறகு கிக் [...]

கோவா செல்லும் சிம்பு

நடிகர் தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ் தன்னுடைய ‘இங்க என்னா சொல்லுது ‘ படத்தை வெற்றி படமாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் படத்துடைய தலைப்பு, பிறகு தமிழ் திரை உலகின் பிரதான தொழில்நுட்ப  வல்லுனர்கள், சந்தானம், மீரா ஜாஸ்மின், ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட   நல்ல நடிகர்கள் தேர்வு என்று ஆரம்பமாக இப்படத்தில் முத்தாய்ப்பாக சிம்பு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை மலேசியாவின் பெரும்பகுதிகளில் படமாக்கிய கணேஷ், தற்போது சிம்பு [...]

ஆன்மீகத்தில் கவனம் செலுத்தும் சிம்பு

சர்ச்சை நடிகராக வலம் சிம்பு இனி ஆன்மீக நடிகராக வலம் வரப் போகிறார். ஆம், முன்பு போல் இல்லாமல் பெரிய அளவில் மாறியிருக்கும் சிம்பு, தற்போது ஆன்மீகத்தில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறாராம். திரைப்படங்களில் இமேஜ் பார்க்காமல் நடிப்பது, அனைவரிடமும் மென்மையாக பேசுவது, கோபமடையாமல் இருப்பது என்று சிம்புவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் தெரிகிறதாம். அடிக்கடி கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து விடும் சிம்பு, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, நடசத்திர ஓட்டலில் பார்ட்டிக்கு செல்வது என்று அனைத்தையும் நிறுத்திக்கொண்டாராம். [...]

கேன்ஸ் திரைப்பட விழாவில் நகைகள் கொள்ளை

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் உலக புகழ் பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் ரூ.5 1/2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு அடுத்தப்படியாக உலக புகழ்ப்பெற்ற விருது மற்றும் திரைப்பட விழாவாக நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு கோலகலமாக தொடங்கியது. உலகம் முழுவதும் இருந்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இவ்விழாவி கலந்துகொள்கிறார்கள். இந்த ஆண்டு விருது பெறும் நடிகைகள் அணிவதற்காக ஒரு தனியார் நிறவனம் தங்க நகைகளை [...]

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ரம்மி’

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக ‘ரம்மி’ என்றப் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி ஒரு ஹீரோவாகவும், இனிகோ பிரபாகர் மற்றொரு ஹீரோவாகவும் நடிக்கிறார். இவர்களுடன் சூரி முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். ஸ்ரீ வள்ளி பிலிம் நிறுவனம் சார்பில் கே.குருநாதன், பி.ஏலப்பன், எம்.தர்மராஜன், பாலகிருஷ்ணன்.கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயின்களாக ஹீரோயின்களாக காயத்ரி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் [...]

வனவாசம் முடிந்தது.. ‘தெனாலிராமன்’ படத்திற்காக பாடிய வடிவேலு

நடிகர் வடிவேலு காமெடியர் மட்டுமில்லை நல்ல படகரும் கூட.. அதனால் மீண்டும் சினிமா கோதாவில் குதித்துள்ள வடிவேலு தான் நடிக்கும் படத்தில் பாடல் ஒன்றை பாடி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தவுள்ளாராம். இந்த விளையாட்டு ஒர்க்கவுட்டாகுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நடிகர் வடிவேலு வனவாசம் முடிந்து ஒருவழியாக அஞ்ஞாத வாசத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதுதானுங்க விஜயகாந்த் மீது கொண்ட பகையால் அரசியல் களத்தில் புகுந்த வடிவேலுவுக்கு சினிமாவில் பலத்த அடி. இரண்டு வருடமாக சினிமா வாய்ப்பு இன்றி தவித்த [...]

தனுஷ் தான் என் கனவன் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.சோனம் கபூர்

இந்தியில் தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள படம் ராஞ்சனா.  இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சோனம் கபூர்.  இருவரும் பள்ளி மாணவர்கள் கெட் அப்பில் நடித்துள்ளனர். ராஞ்சனா படம் பற்றியும், அதில் தனுசுடன் நடித்த இனியமையான அனுபவங்களை மும்பை மீடியாக்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார். அப்போதுதான் தனக்கு கணவராக வருகிறவர் தனுஷ் மாதிரியே இருக்க வேண்டும் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.  அதோடு நிற்காமல் தமிழ்நாட்டுக்கு சென்று தனுஷ் மாதிரியான ஒருவரைத்தான் தேர்வு செய்வேன் என்று நினைக்கிறேன் என்றும் [...]

விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை

சங்கத்தின் பதிவு எண்ணை கமல்ஹாஸன் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கம் சார்பில் கமல்ஹாஸன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, அவரது விஸ்வரூபம்-2 படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எக்ஸிபிட்டர்ஸ் அசோசியேஷன்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் விஸ்வரூபம் என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தை 11-1-2013 அன்று திரையரங்குகளிலும் டி.டி.எச்சிலும் ஒரே நேரத்தில் [...]

ராம்கோபால் வர்மா இயக்கும் தமிழ்ப் படம் ‘நான் தாண்டா’

‘உதயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து, பிறகு இந்திப் படங்களின் மூலம் உலகளவில் பேசப்படும் இயக்குநராகியுள்ள ராம்கோபால் வர்மா, மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தை இயக்குகிறார். ‘நான் தாண்டா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை, சதீஷ் பிலிம் கார்ப்பொரேஷன் நிறுவனம் சார்பில் தேவி ஸ்ரீ தேவி சதீஷ் தயாரிக்கிறார். எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலாகியுள்ள சர்வானந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அனாமிகா ஹீரோயினாக நடிக்கிறார். எப்போதும் போல நாட்டில் நடக்கும் [...]

மாதுரி திட்சித்தை ஒரு தலையாக காதலித்திருக்கிறேன் – ரண்பீர் கபூர் ஜாலி பேட்டி

இந்தி திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் ரிஷி கபூர். இவருடைய மகனும், தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவருமான ரண்பீர் கபூர், நடிகை மாதுரி தீட்சித்தை என்னுடைய இளமக் காலத்தில் ஒரு தலையாக காதலித்துள்ளேன் என்று பேட்டியளித்துள்ளார். ரண்பிர் கபூர் நடிக்கும் ‘ஏ ஜவானி ஹே திவானி’ என்ற இந்தி படம் வரும் 31ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் இடம்பெறும் ‘காக்ரா’ என்ற குத்தாட்ட பாடலில் நடிகை மாதுரி தீட்சித்தின் நடனம் இடம்பெறுகிறது. [...]