RSSAll Entries in the "சினி விமர்சனம்" Category

நேரம் – சினிமா விமர்சனம்

நேரம் , ரெண்டு வகைப்படும். ஒண்ணு கெட்ட நேரம், இன்னொண்ணு நல்ல நேரம். கெட்ட நேரத்துக்கப்புறம், கண்டிப்பா நல்ல நேரம் வரும்…என்று கொஞ்சம் சோகமான பின்னணிக் குரலுடன் ஆரம்பமாகி அதே குரலுடன் இனிமையாக முடியும் படம்… நேரம், ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்ற ஒரு வரிக் கதையை, அழகான, அற்புதமான திரைக்கதையுடன் நம்மை  இரண்டு மணி நேரம் நகர விடாமல் உட்கார வைத்து விடுகிறார்கள். எங்க இருந்து கிளம்பி வர்றாங்களோ தெரியலை, இப்படிப்பட்ட  புதுப்புது [...]

நாகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ

கரைவேட்டிகளில் ‘இங்க்’ அடிக்கிற வேலையை எப்போதும் கச்சிதமாக செய்வார் மணிவண்ணன். வயசான குதிரையாக இருந்தாலும் ‘வாங்கடா பார்க்கலாம்’ டோர்ன் இருக்கிறது இந்த படத்தில் வரும் மணிவண்ணனுக்கும், அவரது வசனங்களுக்கும்! ‘மணி…’ என்று சத்யராஜ் அழைக்க, ‘…ங்கணா’ என்று மணிவண்ணன் பம்முகிற காட்சிக்காகவே பலமுறை சிட்டிங் கொடுக்கலாம் இந்த நாகராஜசோழனுக்கு! குறைந்த ஓட்டில் ஜெயித்து கோட்டைக்கே ராஜாவாகிற சில அதிர்ஷ்டசாலிகள் மாதிரி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பெரும் கலெக்ஷனை அள்ளக்கூடும். ஏனெனில் இந்த அரசியல் நையாண்டிகள் அத்தனையும் [...]

சூது கவ்வும் – விமர்சனம்!

நகைச்சுவைக்கென எந்த பார்முலாவும் இல்லாமல் ஒரு புது ரகமாக‌ கதை சொல்லும் படமாக‌ வந்திருக்கும் படம் தான் ‘சூது கவ்வும்’. கதை ஒன்றும் அப்படி சினிமாவை புரட்டிப்போடும் வகையறாவெல்லாம் இல்லை. ஆனால் கதாபாத்திரங்களை உருவாக்கியதில் இயக்குநர் காட்டிய அக்கறையும், அவற்றில் இருக்கும் புதுமையும் தான் படத்தின் வெற்றி படியாக அமைந்திருக்கிறதென்பதில் எந்தவித‌ ஐயமுமில்லை.. சரி படத்தின் கதைக்கு வருவம், ஒரு அறையில் வேலையில்லாத மூன்று நண்பர்கள் தங்கியுள்ளனர். விஜய்சேதுபதியுடன் ஒரு ஒயின்ஷாப் சண்டையில் ஒன்று சேர்கிறார்கள். பிறகு [...]

நான் ராஜாவாகப் போகிறேன்

இமாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லை பகுதியில் தன் தாய் சீதாவுடன், மாமா வாசு விக்ரமின் ஆதரவில் வாழும் ஜீவா எனும் நகுல், சதா சர்வகாலமும் தூங்கி வழியும் கேரக்டர். ஒருநாள் சிறுவர்களுடன் விளையாட்டுத்தனமாக மிலிட்டரி கேம்பிற்குள் அத்துமீறி நுழைந்தார் என்பதற்காக சின்ன தண்டனை பெறும் அவரை பார்க்கும் ஜவான் ஒருவர், சென்னையில் தன்னுடன் படித்த ராஜா மாதிரியே ஜீவாவும் இருப்பதாக சொல்லி கிக்பாக்ஸிங் புலியான ராஜாவின் வீடியோவையும் ஜீவாவிற்கு போட்டு காட்டுகிறார். அந்த வீடியோவைப்பார்த்தது முதல் தன் [...]

ஒருவர் மீது இருவர் சாய்ந்து

இப்பொதெல்லாம் தமிழ் சினிமா இயக்குநர்கள் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை வைத்தே ஒரு படத்திற்கான கதையை பிடித்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பத்திரிகை செய்தி தான் ‘ஒருவர் மீது இருவர் சாய்ந்து’ படத்தின் கதை. தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும் வேலை செய்யும் நாயகி சுவாதியை, ஹீரோ லகுபரன் காதலிக்கிக்கிறார். மற்ற ஹீரோக்களைப் போலவே சுவாதியை மடக்க பல டெக்னிக்குகளை கையாள, இறுதியில் சுவாதியும் லகுபரனின் காதலை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் ஒரு [...]

கௌரவம்

குளிரூட்டும் முன் பனியில் ஒரு கப் டீ குடிக்கிற ருசியோடு இருக்கும் ராதாமோகனின் படங்கள். இந்தமுறை அவர் தந்திருப்பது டீக்கு பதிலாக ஆளுக்கொரு துண்டு நெருப்பு! உச்சந்தலையில் தீக்குச்சியோடு திரியும் அத்தனை சாதி வெறியர்களும் பார்க்க வேண்டிய படம் இது. தீயை அணைக்கிறேன் பேர்வழி என்று மேலும் பெட்ரோல் ஊற்றுகிறாரோ என்கிற ஐயத்தையும் ஏற்படுத்துகின்றன சில காட்சிகள். பட்…? ராதாமோகனின் இந்த வேகமான சவுக்கு வீச்சுக்கு முதுகு காட்டியே ஆக வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள்.   தன்னுடன் படித்த [...]

கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம்

>தொடர்ந்து ‘ஹிட்’ படங்கள், அதுவும் ‘நல்ல படம்’ என பெயரெடுத்த படங்களைக் கொடுத்த இயக்குனர் பாண்டியராஜ் இன் புதிய படம், சின்னத்திரையில் ஆரம்பித்து இன்று சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் – யாருக்கும் போட்டியில்லாத இயல்பான நடிப்பின் செல்லப் பிள்ளை விமல் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. அதனாலயோ என்னமோ ஸ்ரூடியோ கிறீன் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை நம்பிக்கையா வாங்கி வெளியிடுறார். படம் எதிர்பார்ப்பை பூர்த்தி [...]

சென்னையில் ஒரு நாள் – விமர்சனம்

தயாரிப்பு – ஐ பிக்சர்ஸ் – மேஜிக் பிரேம்ஸ் – ஆர். ராதிகா சரத்குமார் & லிஸ்டின் ஸ்டீபன் இயக்கம் – ஷஹித் காதர் இசை – மெஜோ ஜோசப் கதை – பாபி – சஞ்சய் ஒளிப்பதிவு – ஷேஹநாத் ஜே. ஜலால் படத்தொகுப்பு – மகேஷ் நாராயண் வசனம் – அஜயன் பாலா நடனம் – ஷங்கர் சண்டைப் பயிற்சி – மிராக்கல் மைக்கேல் மக்கள் தொடர்பு – நிகில் வெளியான தேதி – [...]

கந்தா – விமர்சனம்

கரண், மித்ரா குரியன், ராஜேஷ், விவேக், சத்யன் இசை: சத்யசெல்வா தயாரிப்பு: வி பழனிவேல் இயக்கம்: பாபு கே விஸ்வநாத் விவசாயம், எளிய வாழ்க்கை என்று இருந்த தஞ்சை மண்ணை, ரவுடியிசமும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ராஜ்யமும் ரத்தக் களறியாக்குகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருப்பவன் ஒரு நல்லாசிரியருக்கு மகனாகப் பிறந்தவன். ஆனால் அதே நல்லாசிரியரால் வளர்க்கப்பட்ட ஹீரோ கரண் எப்படி காந்திய வழியில் அந்த வில்லனை திருத்த முயல்கிறார் என்பது கந்தா படத்தின் சுருக்கமான கதை.   [...]

வத்திக்குச்சி

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது தம்பி தீலீபனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கும் படம் தான் ‘வத்திக்குச்சி.’ சென்னையை அடுத்துள்ள புறநகர் பகுதி சமத்துவபுரத்தில் வசிக்கும் ஷேர் ஆட்டோ ஓட்நரான திலீபன், பிறருக்கு உதவி செய்வதினால் உபத்தரத்தை தேடிக்கொள்கிறார். இதானால் பணத்திற்காக கொலை செய்யும் கூலி படைத்தலைவன் சம்பத், நகைக்கடை முதலாளி ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது மகன் ஆகியோர் திலீபனை கொலை செய்ய நினைக்க, திலீப்பனின் எதிர் வீட்டில் வசிக்கும் ஜெகனும் அவரது நண்பர்களும் திலீபனை கொலை செய்ய துப்பாக்கியுடன் அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். [...]