RSSAll Entries in the "சினி விமர்சனம்" Category

பாலாவின் பரதேசி – விமர்சனம்

தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் இந்திய சினிமா வரலாற்றில் திரைப்பட கலையின் உச்சகட்டத்தை தொட்ட மிகச்சில படங்களில் இந்த பரதேசியும் ஒன்று. தமிழர்களாகிய நாம் தினம் தினம் 3 முறை, 6 முறை அதுக்கும் மேலே என இஷ்டத்துக்கு அருந்தும்  டீ-க்குப் பின்னால், அது எப்படி நம்மீது திணிக்கப்பட்டது.. அதற்காக அப்பாவி ஏழை மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்.. எப்படி வஞ்சிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கதை இருக்கிறது என்பதே மிரட்சியாய் இருக்கிறது. ஒரு வருமானமில்லாத சுதந்திரமான ஏழைகளாய் ஆட்டம், [...]

ஒன்பதுல குரு

தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் எப்போதும் உண்டு.. தாலி செண்டிமெண்ட் படம் ஒன்று ஹிட் ஆகிவிட்டால் அடுத்த ரெண்டு மூன்று வருடங்களுக்கு, “புருஷன்னா யாருன்னு தெரியுமா?” என்று தத்துவம் பேசும் படங்களாக வந்து தள்ளும்.. திடீரென்று ஒரு சாமி படம் வரும். டிவி, பத்திரிகை, நாடகம், தியேட்டர் என்று எங்கு பார்த்தாலும் சாமியாட்டம் தான் இருக்கும். படம் பார்க்கு போது தியேட்டரில் இத்தனை பேர் சாமியாடினார்கள் என்று புள்ளிவிவர செய்திகள் வாய் வழியாக வந்துகொண்டிருக்கும். குடும்ப கதைகள் [...]

வெள்ளச்சி திரைவிமர்சனம்

கதையின் கரு: மகனுக்கு தந்தையே வில்லனாகும் கதை. செவ்வாளை, மனைவியை இழந்தவர். இவருடைய ஒரே மகன், பிண்டு. எதற்கெடுத்தாலும் மகனை குறை சொல்கிறார். திட்டித்தீர்க்கிறார், செவ்வாளை. வாலிப வயதில் மகனை வைத்துக்கொண்டு கள்ளக்காதல் விவகாரங்களிலும் ஈடுபடுகிறார். செவ்வாளையின் கள்ளக்காதலை காட்டிக் கொடுத்து, அவரையும், கள்ளக்காதலியையும் பிரிக்கிறார், பிண்டு. இது, செவ்வாளைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மகனையும், அவன் காதலியையும் பிரிக்க சதித்திட்டம் தீட்டுகிறார். அவருடைய சதி நிறைவேறியதா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’ பாண்டுவின் மகன் பிண்டு கதாநாயகன் ஆகியிருக்கிறார். [...]

நேசம் நெசப்படுதே சினிமா விமர்சனம்

சாதி, மதம், உள்ளூர்க்காரன், வெளியூர்க்காரன் என்ற வேறுபாடுகள் பார்க்கும் அந்த கிராமத்துக்கு புதிதாக வந்து சேருகிறார், வேந்தன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அரசிக்கும் காதல் மலர்கிறது. இதற்கு பஞ்சாயத்து தலைவர் பாபு வில்லனாக குறுக்கே வருகிறார். வேந்தனை தன் அடியாட்கள் மூலம் அடித்து உதைத்து, ரெயில் தண்டவாளத்தில் வீச ஏற்பாடு செய்கிறார். தண்டவாளத்தில் வீசப்பட்ட வேந்தனை தெனாலி காப்பாற்றுகிறார். உயிர் பிழைத்த வேந்தன் ஊரில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாக இருக்கிறார். அவருடைய தாயும், தந்தையும் சென்னையில் [...]

நான்காம் பிறை விமர்சனம்

நான்காம் பிறையின் உறைய வைக்கும் விமர்சனம் இதுநாள் வரை ஹாலிவுட் படங்களிலே‌யே மனித இரத்தம் குடிக்கும் டிராகுலா எனும் ஓநாய் பேய்களை கண்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு, முதன்முதலாக தமிழில் ஒரு டிராகுலா பேய் படம்! விக்ரம் நடித்து வெளிவந்த “காசி” உள்ளிட்ட தமிழ்படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் வினயனின் வித்தியாசமும், விறுவிறுப்புமான இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 3டி படம்தான் “நான்காம் பிறை!” கதைப்படி, ருமேனியா நாட்டிற்கு, தனது ரகசிய டிராகுலா ஆராய்ச்சிக்காவும், கூடவே தன் புதுமனைவியுடனான [...]

அமீரின் ஆதி-பகவன்

அமீரின் ஆதி-பகவன் என்று தலைப்பு வைத்தற்கு பதில் ஜெயம் ரவியின் ஆதி-பகவன் என்று தலைப்பு வைத்திருக்கலாம், அந்த அளவுக்கு இந்த படத்தில் இயக்குநர் அமீரின் ஆதிக்கம் குறைவாகவே உள்ளது. அமீர், தனது பாணியில் இருந்து மாறுபட்டு முதல் முறையாக கமர்ஷியல் படம் இயக்கியிருக்கிறார் என்றாலும், அமீருக்கே உரித்தான ஒரு ஒரிஜினாலிட்டு இந்த படத்தில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். தாய்லாந்து நாட்டுக்கு பிழைப்புக்காக வரும் தமிழ் குடும்பத்தினரான ஜெயம் ரவி, அங்கே உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டு, பிறகு அவரே [...]

ஹரிதாஸ்

‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’ ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன், ‘ஹரிதாஸ்’ படத்தை தனது முதல் படமாக இயக்கியிருந்தால், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பார். கதாபாத்திர தேர்வு, திரைக்கதை, காட்சியமைப்பு, கதைக்களம் என்று ஒரு கலை படமாகவும் அதே சமயம் வியாபார ரீதியான ஜனரஞ்சகப் படமாகவும் ‘ஹரிதாஸ்’ படத்தை குமரவேலன் இயக்கியிருக்கிறார். ஆர்டிசம் பாதிக்கப்பட்ட தனது மகனை எப்படியாவது ஒரு சாதனையாளனாக்க முயற்சிக்கும் ஒரு தந்தைக்கும், மகனுக்கு இடையே உள்ள [...]

டேவிட் விமர்சனம்

விக்ரம் ஜீவா இணைந்து நடித்திருக்கும் டேவிட் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஒரு பெயர் இரண்டு வாழ்க்கை என்பதை சப் டைட்டில் மாதிரி போட்டுதான் விளம்பரம் செய்தார்கள். இதிலிருந்தே படத்தின் கதையை ஓரளவு யூகித்துவிட முடியும். ஆம் அதேதான். படத்தில் விக்ரம் பெயரும் ஜீவா பெயரும் ஒன்றேதான்… அது, டேவிட். இரண்டு பேருடைய கதையையும் மிக்ஸ் பண்ணி ஒரே படத்தில் கொடுத்திருக்கிறார்கள். கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட கெடுத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஜீவாவின் கதை 1999ல் நடப்பதாக [...]

கடல் – சினிமா விமர்சனம்

சின்ன வயதிலேயே தன்னுடைய தாயை இழந்து அநாதையாகிறான் சிறுவன் தாமஸ் (கவுதம் கார்த்திக்). அதன் பிறகு ஊர்ல வேண்டாத வேலைகள் எல்லாம் செய்துட்டு அலைகிற தாமஸை அந்த ஊருக்கு வருகிற பாதிரியார் (அரவிந்த்சாமி) திருத்துகிறார். ஒருகட்டத்தில் மேசக்காரர் (அர்ஜூன்) என்பவரிடம் அடியாளாக வேலைக்கு சேருகிறான் தாமஸ். அவரிடம் இருந்து மீண்டு வந்தானா? இடையில் அவனுள் வரும் காதல் கடைசியில் என்னவாகிறது என்பது க்ளைமேக்ஸ். படத்தின் முதல் காட்சியிலேயே தாமசின் வீட்டுக்கு செட்டி வருவதும், தாமசை வெளியே அனுப்பிவிட்டு [...]

விஸ்வரூபம் – விமர்சனம்

விஸ்வரூபம் பார்க்கும் போது அதிகபடியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது. ஏன் எனில் இது போன்ற ஆப்கான் தீவிரவாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த்தாச்சு .இன்னும் வந்துகொண்டே இருக்கு ஒவ்வொருவர் பார்வையில் . கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது .நடனம் சொல்லிகொடுப்பவராக இருக்கிறார் கமல் .அவருடைய மனைவியை வேலை பார்க்கும் முதலாளி விரும்புகிறார் .மனைவிக்கும் அவர்மேல் ஆசையிருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்கவழக்கம் பெண் சாயல் கொண்டவர் .கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் [...]