நடிகர் கார்த்தியின் பள்ளி நாட்களை ஞாபகப் படுத்திய ‘அட்ட கத்தி’

வெளியாகும் முன்பே ரசிகர்களிடமும்இ திரையுலகத்தினரிடமும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்களில் ‘அட்ட கத்தி’ யும் ஒன்று. புதுமுக இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது திரையிடப்பட்ட டிரைலரும்இ பாடல்களும் இப்படத்தில் ஏதோ இருக்கிறது என்று யோசிக்க வைத்தது. அதை தற்போது உறுதிப் படுத்தும் விதத்தில்இ இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இதுவரை கார்த்தி மற்றும் சூர்யாவை மட்டுமே வைத்து படம் தயாரித்துகொண்டிருந்த ஸ்டூடியோ கிரீன் முதல் முறையாக ‘அட்ட கத்தி’ படத்தை வாங்கி வெளியிடுகிறது. ஸ்டுடியோ கிரீன் இந்த படத்தை வாங்க ஞானவேல்ராஜா மட்டும் காரணமில்லைஇ நடிகர் கார்த்தியும் கூட. தனது மனைவிஇ அம்மாவுடன் இந்த படத்தைப் பார்த்த கார்த்தியை மட்டும் இன்றி அவருடைய மனைவிஇ அம்மாவையும் படம் ரொம்பவே கவர்ந்து விட்டதாம். உடனே படத்தை வாங்கி வெளியிட தயாராகி விட்டார்கள். அதுமட்டும் இன்றி ‘அட்ட கத்தி’ பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்ட கார்த்திஇ ‘இந்த படத்தைப் பார்க்கும்போது அப்படியே எனது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது. பள்ளிக்கு போகும் போது நானும் பஸ்ஸில் பயணிச்சிருக்கேன். அப்போது பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அப்போது ப்ளஸ் டூ பசங்க பஸ்ஸில் ஃபுட் போட் அடிக்கறதை ரொம்பவே ரசிச்சி பார்ப்பேன். எப்படிடா இப்படி ஒரு கையிலே தொங்குராங்க என்று என்னோட நண்பர்கள் கிட்ட கேட்பேன்.

பிறகு நான் ப்ளஸ் ஒன் வந்ததும் ஃபுட் போட் அடிக்க ட்ரை பன்ணினேன். வண்டி கிளம்பியவுடன் ஓடி போய் ஏறுவதுதான் ஸ்டைல். நான் அப்போ ரொம்ப குண்டாக இருப்பதால் ஓடமுடியாமல் அடுத்த ஸ்டாப்லதான் அந்த பஸ்ஸையே புடிப்பேன். பிறகு ஃபுட் அடிக்கும் போதுஇ மச்சா நீ நிக்கிற இடத்துல பத்து பேர் தொங்கலாம் அதனாலே நீ உள்ளே வா.. என்று என்னை கிண்டலடிப்பாங்க. அந்த நினைவுகளையெல்லாம் இந்த படம் எனக்கு ஞாபகம் படுத்தியது.’ என்று தனது பள்ளி நினைவுகளை பகிர்ந்துகொண்ட கார்த்திஇ ‘இப்படம் முடியும் வரை சிரித்து கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு படத்தை ரொம்பவே ஜாலியாக இயக்கியிருக்கிறார் ரஞ்சித்.’ என்று கூறினார்.

கார்த்தியுடன் இந்த படத்தை இயக்குநர்கள் வெற்றி மாறன்இ வெங்கட் பிரபுஇ ராஜேஷ்இ பாண்டிராஜ் ஆகியோரும் பார்த்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் போது வெற்றி மாறன் விழுந்து விழுந்து சிரித்தாராம். அவரைப் போலவே மற்றவர்களும் படத்தை ரொம்பவே ரசித்திருக்கிறார்கள் என்பது அவர்கள் பேசும் போது தெரிந்தது.

சென்னையை ஒட்டி உள்ள கிராமத்தை கதைகளமாக கொண்ட இப்படம் முழுக்க முழுக்க கல்லூரி நாட்களை ஞாபகம் படுத்தும் விதாமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அனைவரும் புதுமுகங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Filed Under: கார்த்திசினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English