Elysium படத்துக்காக மொட்டை அடித்த Matt Damon

கேரக்டருக்காக வருத்திக் கொள்வது ஹாலிவுட்டிலும் இருக்கிறது. அதற்காக இருபது வயசு நடிகர் தேவையில்லாமல் அறுபது வயசு மேக்கப் போடுவதில்லை. இது வேறு மாதி‌ரி.

டிஸ்ட்‌ரிக்ட் 9 படத்தை எடுத்த Neill Blomkamp அடுத்து Elysium என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் மேட் டேமனும், ஜுடி பாஸ்டரும் நடிக்கின்றனர்.

முந்தையப் படம் போலவே இதுவும் விண்வெளி வேற்றுக்கிரகவாசி என்று போகிறது. மேட் டேமனின் உடற்கட்டு எப்போதும் ஃபிட்டாக இருந்தாலும் இந்தப் படத்துக்காக இரும்புபோல உடம்பை மாற்றியிருக்கிறார். எல்லாம் கடும் உடற்பயிற்சி.

மேலும் படத்துக்காக தலையை மொட்டை அடித்துள்ளார். மொட்டைத் தலையுடன் பார்ப்பதற்கு இளவயசு புரூஸ் வில்லிஸ் போலிருக்கிறார் டேமன்.

கேரக்டருக்காகதான் இந்த மொட்டையும் உடற்பயிற்சியும் என்று தெ‌ரிவித்திருப்பவர் படத்துக்காக போடும் முதல் மொட்டை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Filed Under: சினி செய்திகள்ஹாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English