டேனியல் கிரேக்கின் SKYFALL டிரைலர்

பிரிட்டனின் உளவு கதாப்பாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தற்போதைய நாயகன் டேனியல் கிரேக் நடிக்கும் SKYFALL படத்திற்கான புதிய ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஸ்கை பால் (SKY FALL) என பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 ஆவது படமாகும்.

அதுமட்டுமின்றி ஜேம்ஸ்பாண்ட் கதாப்பாத்திரம் உருவாகி 50 ஆண்டுகள் தொடங்குவதும் இந்த ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் ‘SKY FALL’ படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். ஜேவியர் பார்டெம் வில்லானாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக கறுப்பழகி நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சீனா, துருக்கி, பிரிட்டன் தவிர இந்தியாவில் கோவா, அஹமதாபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் ட்ரெய்லர், கடந்த மே மாதம் வெளியானது. தற்போது இரண்டாம் கட்ட ட்ரைலர் ஒன்று வெளியாகியுள்ளது.

SKY FALL வரும் ஓக்ரோபர் 26 ஆம் திகதி உலகமெங்கும் திரைக்கு வருகின்றது.

Filed Under: சினி செய்திகள்முக்கிய செய்திகள்ஹாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English