ஹன்சிகாவிற்கு அக்கா நான்! ஆண்ட்ரியா விளக்கம்

வேட்டை படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹன்சிகாவுக்கு அக்காவாக நடிப்பதில் தயக்கமில்லை என்றார் ஆண்ட்ரியா.

இது குறித்து அவர் கூறுகையில், தமிழில் வெளியான வேட்டை படம் தெலுங்கில் பலே தம்முடு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இதில் ஹன்சிகாவின் அக்காவாக என்னை நடிக்க கேட்டார்கள். இயக்குனர் லிங்குசாமி இதுபற்றி என்னிடம் பேசும் போது, நல்ல வேடம் ஏற்று நடிக்கச் சொன்னார். பொருத்தமான வேடம் என்று எனக்கும் தோன்றியதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இயக்குனர் கிஷோர் இயக்கும் இப்படம் எனக்கு புதிய பரிமாணத்தை தரும் என்று நம்புகிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அக்கா வேடத்தில் நடிப்பது ஏன்? என்று கேட்கிறார்கள். நான் டீன் ஏஜ்ஜை கடந்துவிட்டேன். ஆனால் ஹன்சிகாவுக்கு இப்போதுதான் 21 வயது ஆகிறது.

அவருக்கு அக்காவாக நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டு மென்றால் இப்போதுள்ள பல நடிகைகள் ஹன்சிகாவின் மூத்த சகோதரி போல் தான் இருக்கிறார்கள்.

இதை மற்றவர்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இதுதான் நிஜம். எனவே தான் என்ன வயது வேடம் என்று பார்க்காமல் அதில் நடிக்க எவ்வளவு வாய்ப்பிருக்கிறது என்று கவனம் செலுத்த முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்தமிழ்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English