பிரபல நடிகை, நடிகர்களின் ஆடைகள் ஏலத்தில்!

பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், சூர்யா, மாதவன், விக்ரம் மற்றும் நடிகை த்ரிஷா அணிந்த ஜீன்ஸ் பேண்ட் ஏலத்திற்கு வருகிறது.

ஆதரவற்ற குழந்தைகளின் நல்வாழ்வு நிதிக்காக பிரபல நடிகர், நடிகைகள் அணிந்த ஜீன்ஸ் உடைகள் ஏலத்துக்கு வரவுள்ளது.

இதிலிருந்து வரும் நிதி ஆதரவற்ற குழந்தைகள் கல்விக்காக செலவிடப்பட உள்ளது. பாலிவுட், கோலிவுட் நடிகர்களிடம் தாங்கள் அணிந்த ஜீன்ஸ் பேன்ட்களை தரும்படி ஆதரவற்ற குழந்தைகள் அமைப்பான பரிக்ரமா வேண்டுகோள் விடுத்திருந்தது.

இது பற்றி அமைப்பாளர் ஷோபா கூறுகையில், ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு நிதி திரட்டுவதற்காக பிரபல நட்சத்திரங்களிடம் அவர்கள் அணிந்த ஒரு ஜீன்ஸ் பேன்டை கையெழுத்திட்டு தர வேண்டும் என்று கேட்டிருந்தோம்.

அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் ஜீன்ஸ் ஒரே இடத்தில் ஏலம் விடப்படும். அதிக விலைக்கு ஏலம் கேட்பவர்கள் கையோடு அதை எடுத்துச் செல்லலாம்.

ஸ்டார் அந்தஸ்துக்கு தகுந்தார் போல் ஏல தொகை மாறுபடும். அமிதாப்பச்சன், சூர்யா, மாதவன், விக்ரம், தனுஷ், த்ரிஷா உள்ளிட்டோர் தங்களின் ஜீன்ஸ் உடையை தர சம்மதித்திருக்கிறார்கள்.

ரஜினியிடமும் கேட்டிருக்கிறோம். அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Filed Under: கமல்சினி செய்திகள்சூர்யா

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English