ரஜினி, கமல் படங்களுக்கு இன்சூரன்ஸ்

ரிஸ்க் அதிகமுள்ள தொழில்களில் ஒன்றான சினிமாவுக்கு தற்போது இன்சூரன்ஸ் செய்வது வாடிக்கையாகி வருகிறது.

திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் வரை தயாரிப்பாளர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

படப்பிடிப்பு அரங்குகளில் எதிர்பாராத தீ விபத்து, வெள்ளம், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு காயம் ஏற்படுதல் போன்ற பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன.

இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள படங்களை இன்சூரன்ஸ் செய்ய தொடங்கி உள்ளனர். எனவே ரஜினி, கமல் உள்பட பெரிய நடிகர்களின் படங்களுக்கு இப்போது கட்டாய இன்சூரன்ஸ் என்பதில் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நடிகர்களே கவனமாக உள்ளனர்.

இந்த காப்பீட்டால் படப்பிடிப்புகளின் போது ஏற்படும் விபத்துக்களுக்கு ஓரளவு நஷ்ட ஈடு கிடைக்கிறது.

முன்பு ரஜினியின் சிவாஜி, எந்திரன் படப்பிடிப்புகளின் போது நடந்த சிறு விபத்துக்களுக்கு நஷ்ட ஈடு கிடைத்தது. அதேபோல மணிரத்னத்தின் ராவணன் பட செட் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. அதற்காக ரூ 30 லட்சம் இழப்பீடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஜினி நடிக்கும் கோச்சடையான், கமல் நடிக்கும் விஸ்வரூபம், ஆர்யாவின் இரண்டாம் உலகம், மணிரத்னம் இயக்கும் கடல், பாலா இயக்கும் பரதேசி படங்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில், சமீபத்தில் படப்பிடிப்பு குழுவை சேர்ந்தவர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படத்தை இன்சூரன்ஸ் செய்து இருந்ததால் அவருக்கு மருத்துவ செலவாக ரூ.1 1/2 லட்சம் கிடைத்தது என்றார்.

இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையாக படத்தின் மொத்த பட்ஜெட்டில் இருந்து 0.3.ல் இருந்து 1 சதவிகிதமே வசூலிக்கின்றனர்.

Filed Under: கமல்கொலிவூட்சினி செய்திகள்ரஜனி

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English