சிங்கம்- 2 படத்திற்கு பூஜை

சிங்கம்- 2 படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. முதற்கட்ட பணியாக படத்திற்கு பூஜை நடந்தது.

கொலிவுட்டில் ஹரி இயக்கிய சிங்கம் படம் வெற்றி பெற்றதையடுத்து இரண்டாம் பாகத்திற்கான படவேலைகளில் ஹரி இறங்கியுள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த சூர்யாவே இரண்டாம் பாகத்திலும் கதாநாயகன்.

கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். இரண்டாம் நாயகியாக ஹன்சிகா பள்ளி மாணவியாக நடிக்கிறார்.

இவர்களுடன் மனோரமா, விவேக், சந்தானம் மற்றும் பலர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கான பட பூஜையில் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, நடிகர் சூர்யா, நடிகர் சிவகுமார், நடிகர் கார்த்தி, இயக்குனர் ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் படப்பிடிப்பை தொடங்கி தென்னாப்பிரிக்காவில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் ஹரி.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்சூர்யா

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English