சூர்யாவின் அடுத்த படம்?

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ‘மாற்றான்’ படத்தில் நடித்து முடித்தார் சூர்யா.

தற்போது, ஹரியின் ‘சிங்கம்-2′ படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துப்பறியும் ஆனந்தன்’ படத்தில் நடிப்பது பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து சூர்யா கூறுகையில், நானும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் இணைந்து பணியாற்ற போகிறோம்.

துப்பறியும் ஆனந்தன் படத் தலைப்பில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள் என்றும் ஆனால் படத்தின் தலைப்பு மற்றும் திரைக்கதை எதுவும் இன்னும் முடிவாகவில்லை எனவும் கூறியுள்ளார்.

இருவரும் ஏற்கனவே இணைந்த வாரணம் ஆயிரம் படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்சூர்யா

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English