துப்பாக்கி இசைவெளியீடு

கலைப்புலி தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான ‘துப்பாக்கி’ படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ளார்.

துப்பாக்கி நாயகனாக இளையதளபதி விஜய், நாயகியாக காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார்கள்.

துப்பாக்கி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ், கவிஞர்கள் முத்துகுமார், கார்க்கி, விவேகா ஆகியோர் பாடல்கள் உருவான விதம் பற்றி பேசினார்கள்.

படத்தில் வரும் ‘கூகுள் கூகுள்’ பாடலை விஜய் பாடியுள்ளார். படத்தின் இசைக் குறுந்தகடை விஜய், இயக்குனர் முருகதாஸ் இருவரும் வெளியிட பிலிம் நியுஸ் ஆனந்தன் உள்ளிட்ட பிரபலங்கள் பெற்றுக்கொண்டார்கள்.

படத்துக்கு பொருளாதார சிரமம் ஏற்பட்ட போது விஜய் தோள் கொடுத்து உதவியது பற்றியும், முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படம் உருவான விதம் பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பேசும் போது தயாரிப்பாளர் தாணு குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரஜினிகாந்தும் முருகதாசும் இணைய இருப்பதாக பட வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்விஜய்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English