காஜல் தான் பெஸ்ட் பிரண்ட்: விஜய்

பெயரிலேயே இனிப்பை வைத்திருக்கும் காஜல் அகர்வால் தான் என்னோட ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரண்ட் என்கிறார் நடிகர் விஜய்.

விஜய் கதாநாயகனாக நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் துப்பாக்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே விஜய் இவ்வாறு பேசியுள்ளார்.

விஜய் பேசுகையில், இந்தப் படம் அமைஞ்சதுக்காக எங்க அப்பாவுக்கு நான் நன்றி சொல்லணும்.

இந்த படத்துக்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் தாணு ஆகியோரை ஏற்பாடு செய்து கொடுத்தவர், எங்க அப்பாதான்.

ஏ.ஆர்.முருகதாசை குஷி படத்தில் இருந்து எனக்கு தெரியும். அவர் இயக்கிய அனைத்து படங்களையும் பார்த்து இருக்கிறேன். அற்புதமாக கதை சொல்லக்கூடியவர், என்னை கவர்ந்த இயக்குனர்.

காஜல் அகர்வால், பெயரிலேயே இனிப்பை வைத்திருக்கிறார். அகர்வால் ஸ்வீட் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பிடித்த கேர்ள் ப்ரெண்ட் காஜல் அகர்வால் தான் என்றார்.

Filed Under: சினி செய்திகள்சினி மினிவிஜய்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English