சர்ச்சை பேச்சு: சோனாவுக்கு ஆதரவளித்துள்ள பெண்கள் சங்கம்

நடிகை சோனா ஆண்கள் டிஷ்யூபேப்பர் மாதிரி என்று இழிவுபடுத்தி பேட்டியளித்தாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனால் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் சோனா வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்தி கைதாகி உள்ளனர்.

இப்போராட்டத்துக்கு பெண்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவரும் மனித உரிமை கழக சர்வதேச அமைப்பு மகளிர் அணி நிர்வாக செயலாளருமான கல்பனா கூறுகையில், நடிகை சோனா வீட்டில் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

ஆண்கள் பற்றி அவதூறாக பேசவில்லை என்று சோனா மறுத்து விட்டார். வருத்தமும் தெரிவித்து விட்டார். அதன்பின்பும் அவருக்கு எதிராக போராடுவது முறையல்ல.

அதுவும் ஒரு பெண்ணை கண்டித்து அவர் வீட்டில் இத்தனை ஆண்கள் குவிந்து கோஷம் போடுவது ஏற்ககூடியது அல்ல.

சூர்யா படத்தில் பெண்களை நம்பி கெட்டுபோனவர் பலர் என்று பாடல் வந்துள்ளது.

தனுஷ், சிம்பு படங்களிலும் பெண்களுக்கு எதிரான பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதை நாங்கள் சினிமாவாக பார்க்கிறோம். எனவேதான் எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடவில்லை.

சோனா இழிவாக பேசி இருப்பதாக கருதினால் நீதிமன்றத்துக்கு செல்லலாம். அதை விடுத்து ஒரு பெண் என்றும் பாராமல் கண்டன போராட்டங்கள் நடத்துவது அவரது வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆண்களுக்கு சங்கம் தேவையில்லை. பெண்கள்தான் சமூகத்தில் பல வகைகளில் பாதிக்கப்படுகின்றனர்.

சோனாவை மிரட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் போராட்டம் தொடருமானால் சோனாவுக்கு பெண்கள் இயக்கம் பாதுகாப்பு அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English