அப்பாவை இயக்கும் அளவிற்கு அனுபவம் இல்லை என்கிறார் ஐஸ்வர்யா

ஒரு படம் மட்டுமே இயக்கி இருப்பதால், அப்பா ரஜினியை இயக்க அனுபவம் போதாது என்கிறார் ஐஸ்வர்யா.

செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஐஸ்வர்யா, தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடிப்பில் 3 என்ற படத்தை இயக்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ரஜினியின் மகளாக இருக்கலாம், தொழில் முறையில் அவர் நடிகர். எந்தவொரு படமாக இருந்தாலும் முதலில் அவர் அதை ஏற்க வேண்டும்.

ரஜினியை வைத்து படம் பண்ணுவீர்களா? என்கிறார்கள். அப்பா என்னுடன் பணியாற்றுவதற்கு நான் இன்னும் தயாராகவில்லை. ஒரு படம்தான் இயக்கி உள்ளேன்.

அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு ஸ்கிரிப்ட்டில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே என் பணியை தொடங்க முடியும்.

என் தங்கை சவுந்தர்யா, அப்பா நடிப்பில் கோச்சடையான் இயக்குகிறார். அவரது கடின உழைப்பு எனக்கு தெரியும். ஆனால் படத்தில் ஒரு காட்சி கூட இன்னும் நான் பார்க்கவில்லை.

எனது கணவர் தனுஷின் நடிப்பில் இந்தியில் உருவாகும் ராஞ்சா படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்த போது நானும் சென்றிருந்தேன்.

தென்னிந்தியாவிலிருந்து யாரையும் அவ்வளவு எளிதாக இந்தி படங்களில் ஏற்பதில்லை, 3 படத்தை இயக்கிய போது இந்தியில் வெளியிட முடிவு செய்தேன். ஆனால் விநியோகஸ்தர் யாரும் கிடைக்கவில்லை. சரியான வாய்ப்பு கிடைத்தால் இந்தியில் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்ரஜனி

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English