”தல” என்று பெயர் வைக்க வேண்டாம்: அஜித்

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு மும்மையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘தல’ என தலைப்பு வைக்க முயற்சி நடக்கிறது.

அஜித்தை ரசிகர்கள் ‘தல’ என பட்ட பெயரிட்டு அழைக்கின்றனர். படங்களிலும் அவரை ‘தல’ என்று சக நடிகர்கள் சொல்வது போல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

பல மாதங்களான தலைப்பு வைக்காமல் உள்ள இத்திரைப்படத்திற்கு நிறைய தலைப்பு தெரிவு செய்து இறுதியில் பொருத்தமாக இல்லை என்று ஒதுக்கி விட்டனர்.

இந்த நிலையில் ‘தல’ என்ற தலைப்பை படத்துக்கு வைக்கலாம் என எழுத்தாளரும், இயக்குநரும் யோசனை கூறினர்.

ஆனால் அஜித் அதை ஏற்காமல், கதைக்கு தேவையான தலைப்பை தெரிவு செய்து வையுங்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் எதுவும் செய்யாதீர்கள்.

‘தல’ பெயர் வைக்க வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டார். அப்போது இயக்குனர் மனதில் அஜித் ரொம்ப உயர்வாக தெரிந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தனது பெயரில் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று அஜித் கலைத்து விட்டார். சம்பாதித்து பெற்றோருக்கு உதவுங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Filed Under: அஜீத்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English