25வது பாடலை பாடும் விஜய்!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்- காஜல் அகர்வால் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த ‘துப்பாக்கி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் பாடல்கள் பெருமளவுக்கு ஹிட்டாகிய போதிலும், விஜய் பாடிய ‘கூகுள் கூகுள்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் வரவேற்பு பெற்றது.

விஜய் கடைசியாக ‘சச்சின்’ படத்தில் பாடியிருந்தார். கடந்த 7 வருடங்களுக்கு பின்பு ‘துப்பாக்கி’ படத்தில் படத்தில்தான் பாடியுள்ளார். இது அவர் பாடிய 24வது பாடலாகும்.

தற்போது விஜய்- ஏ.எல்.விஜய்(இயக்குனர்) இணைந்திருக்கும் புதிய படத்திலும் விஜய் ஒரு பாடலை பாட முடிவெடுத்திருக்கிறார்.

இது அவர் பாடவிருக்கும் 25வது பாடலாகும். இப்படத்திற்கான பாடல் வரிகளை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

இந்த பாடலுக்கு ஏற்கெனவே ஜி.வி பிரகாஷ் மெட்டமைத்துவிட்டார்.

தற்போது, இந்த பாடலை விஜய் எப்படி பாடவேண்டும் என்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்தவாரம் மும்பையில் இப்பாடலை ஒலிப்பதிவு செய்யவிருக்கிறார்கள்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்விஜய்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English