அஜித்துக்கு மீண்டும் அறுவை சிகிச்சை!

நடிகர் அஜித், மீண்டும் முதுகில் அறுவை சிகிச்சையொன்றை மேற்கொள்ள உள்ளார்.

சிறந்த கார் பந்தய வீரரான அஜித், பந்தயங்களில் ஏற்படும் விபத்தின் போது தனது முதுகில் அறுவை சிகிச்சைகள் பல செய்து கொண்டதாக அவரே கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் அஜித், சமீபத்தில் படப்பிடிப்பின் போது கீழே விழுந்தார்.

அவரது காலில் ஏற்பட்ட காயம், மீண்டும் முதுகை பாதித்திருக்கிறது.

அதாவது முதுகில் தண்டுவடத்தில் எலும்பு விலகியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனராம்.

சமீபத்தில் இயக்குநர் ஜோதிகிருஷ்ணா திருமண வரவேற்புக்கு வந்திருந்த அவர் காலைத் தாங்கித் தாங்கி நடந்து வந்தார்.

அவரது உடல்நிலை இயல்புக்குத் திரும்ப கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என அவரது குடும்ப டொக்டர் வற்புறுத்தியதாக தெரிகிறது.

டொக்டர்களின் பேச்சை மீறி, தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அஜீத், வரும் டிசம்பர் 10ம் திகதி முதல், சிறுத்தை சிவா இயக்கவுள்ள படத்தில் கலந்துகொள்ள இருப்பதால் அதற்கு முன்பு சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்ததாகத் தெரிகிறது.

Filed Under: அஜீத்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English