ஜாக்கிசானின் கடைசி ஆக்ஷன் படம் “CZ12”

உலகம் முழுவதிலும் பல கோடி ரசிகர்களைக் கொண்டவர் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்.

இவரது அதிரடி ஆக்ஷன் மற்றும் கொமெடி கலந்த ஆக்ஷன் மூலம் ஆறிலிருந்து அறுபது வரை சகலமானவர்களையும் தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார்.

நூறு படங்கள் வரை ஆக்ஷன் நாயகனாக வலம் வந்த ஜாக்கிசானின் முடிவில் திடீர் மாற்றம்.

101 வது படமாக உருவாகி உள்ள “CZ12″ என்ற படத்தோடு தனது ஆக்ஷன் அவதாரத்தை முடித்துக் கொள்ள இருப்பதாக அவரே அறிவித்து உள்ளார்.

இப்படத்தை ஜாக்கிசானே நடித்து இயக்கி இருக்கிறார். வழக்கமாக ஜாக்கியின் படங்களில் முக்கிய வேடங்களில் சீனர்கள் நடித்திருப்பார்கள்.

ஆனால் இந்தப் படத்தில் ஜாக்கிசானைத் தவிர மற்றவர்கள் அனைவருமே ஹாலிவுட் படங்களில் நடிப்பவர்கள் என்பது இன்னொரு சிறப்பம்சம்.

நமது ஜோசியப்படி 12 ராசிகள் போல சீனர்களின் 12 ராசியை அடக்கி CZ12 என்று சொல்வார்கள்.

இது Armour of the God படத்தின் மூன்றாம் பாகம் ஆகும்.

இப்படம் அடுத்த மாதம் 28ம் திகதி தமிழகம் முழுவதும் 250 திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜாக்கிசான் நடித்த 44 படங்களைத் தொடர்ந்து 45 படமாக இதை இண்டோ ஓவர்சிஸ் பிலிம்ஸ் பெரோஸ் இலியாஸ் இந்தியா முழுக்க வெளியிட தமிழகம் முழுக்க ஆர்ட் ஸ்டூடியோ பட நிறுவனம் வெளியிடுகிறது.

Filed Under: உலகம்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English