மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விஸ்வரூபம் இசை வெளியீடு!

கமலின் விஸ்வரூபம் படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா மீண்டும் தள்ளிப் போனது.

நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகியுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆரோ 3டி தொழில்நுட்பத்தில், பயங்கரவாதத்தை மையப்படுத்தி இப்படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியாக இருக்கிறது.

முன்னதாக இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு திகதியை கடந்த மாதம் அறிவித்து இருந்தார் கமல். சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிருந்தார். ஆனால் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

பின்னர் சென்னையில் மட்டும் இன்று ஓடியோவை வெளியிட இருந்தார். ஆனால் இப்போது அதுவும் ரத்தாகி டிசம்பர் 7ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இந்த ஓடியோ விழா நடக்கிறது, விழா நடைபெறும் இடம் குறித்து விரைவில் தகவல் வெளியாகும்.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English