‘கமாண்டோ ஏகே 47′!

ஹாலிவுட்டில் 1984ம் ஆண்டு வெளியான RED DAWN படம் மீண்டும் எடுக்கப்பட்டு அமெரிக்காவில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்பொழுதே வசூலில் சாதனை படைத்த இப்படம் தமிழில் வெளிவருகிறது என்பதே தற்போதைய செய்தியாகும்.

கமாண்டோ ஏ.கே.47 என்ற பெயரில் இப்படத்தை ஏ.வி.மோகன் அவர்களுடன் ப்ளூ மேட் பிக்சர்ஸ் (BLUE MATT PICTUERS )இணைந்து வெளியிடுகிறது.

தமிழ் தவிர தெலுங்கு, இந்தி என மேலும் இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது கமாண்டோ ஏ.கே.47.

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் நகரத்தை அழிக்க முயற்சி செய்யும் வடகொரியர்களை விரட்டி அடித்து அமெரிக்காவை காப்பாற்றுவதே இப்படத்தின் கதையாகும்.

க்ரிஸ் ஹெம்ஸ் வொர்த், ஜோஷ் பெக், ஏட்ரினா பாலிக்கி, கானர் க்ருஸ், எட்வின் ஹாட்ஜ் இவர்கள் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

வடகொரியர்களை எதிர்த்து போராடி நாட்டை காப்பாற்றும் பொறுப்பில் இவர்களின் கதாப்பாத்திரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைடர் மேன், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் சண்டைக் காட்சிகள் ஒருங்கிணைப்பாளாராகவும் இரண்டாவது யூனிட் இயக்குநராகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்ற டேன் பிராட்லி என்பவர் இயக்கியிருக்கிறார்.

RED DAWN அமெரிக்காவில் வெளியான இரண்டே நாளில் 7.4 மில்லியன் டொலர் வசூல் செய்தது.

அப்போது வசூல் படங்களில் 7வது இடம் வகித்தது. முதல் வாரத்தில் 14.69 மில்லியன் டொலருக்கு உயர்ந்து வார இறுதியில் 22,004,000 மில்லியன் டொலரை அள்ளியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Filed Under: சினி செய்திகள்ஹாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English