விஸ்வரூபம்: அதிர்ச்சியில் திரையுலகம்

விஸ்வரூபம் தொடர்பாக கமல் வைத்துள்ள திட்டம் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்களென அனைவரையும் அதிர வைத்துள்ளது.

விஸ்வரூபம் படத்தின் மொத்த செலவு ரூ.100 கோடிக்கு மேல் எனக்கூறிவரும் கமல் மொத்தத்தையும் ஒரே தவணையில் வசூலிக்க திட்டமிட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் ஒரு பெரிய தயாரிப்பாளர் தமிழக உரிமையை மட்டும் ரூ.40 கோடிக்கு வாங்குவதாக தெரிவிக்க கமலும் சம்மதம் தெரிவித்தாராம்.

இந்த சம்மதத்துடன் கமல் பேசிய விடயம் அந்த தயாரிப்பாளரை தூக்கி வாரிப்போட்டதாம்.

அதாவது படத்தை ஒரே நேரத்தில் தொலைக்காட்சிகளிலும் வெளியிடுவதாகத் திட்டமாம்.

மேலும் டிவிடி உரிமையையும் கொடுத்துவிடப் போவதாகக் கூறினாராம் கமல்.

இதைத் தொடர்ந்து மிகுந்த அதிர்ச்சியுடன் தனது பேரத்தை முடித்துக் கொண்டாராம் அந்த தயாரிப்பாளர்.

மேலும் இந்த விடயத்தை அறிந்த தியேட்டர்காரர்களோ, கமல் இந்த முடிவில் உறுதியாக இருந்தால் அவர் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

திருட்டு டிவிடியைத் தடுக்க ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிட வேண்டும்.

டிவிடி, இன்டெர்நெட் ஒளிபரப்பு உரிமை தர வேண்டும் என்பது கமல் நீண்ட நாட்களாகச் சொல்லி வரும் விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English