பாடகரானார் கார்த்தி!

யுவன் ஷங்கர் ராஜாவின் 100வது படமான பிரியாணியில் கார்த்தி பாடலொன்றை பாடினார்.

வெங்கட் பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் கார்த்தி, ஹன்சிகா மோத்வானி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கும் யுவன்சங்கர் ராஜாவுக்கு இது 100வது படமாகும்.

தனது 100வது படமென்ற நிலையில் யுவனின் இசைக்கு ஏதாவது புதுமை செய்யலாம் என யோசனை செய்த வெங்கட்பிரபு, இப்படத்தில் நடிகர் கார்த்தியை பாட வைத்திருக்கிறார்.

கார்த்தியும், பிரேம்ஜியும் பாடும் அந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார்.

‘மிஸ்ஸிசிபி மிஸ்ஸிசிபி நதி இது’ என்கிற பாடல் வரிகளுக்கு வெங்கட்பிரபுவை சுதி சொல்லி பாட வைத்து ஒலிப்பதிவு செய்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா.

Filed Under: கார்த்திகொலிவூட்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English