எச்.ஐ.வி பரிசோதனை செய்வது முக்கியம்: ஜஸ்வர்யாராய்

ஐ.நா. எய்ட்ஸ் சர்வதேச நல்லெண்ண தூதராக பதவி வகிக்கிறார் நடிகை ஐஸ்வர்யாராய்.

இவர், குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ஐஸ்வர்யாராய் கூறுகையில், எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்யப்போகிறேன்.

கர்ப்பிணிகள் தயக்கத்தை விட்டு விட்டு எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் அவர்களது குழந்தைகள் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கிடையாது. இருந்தாலும் அதற்கு சிகிச்சைகள் இருக்கத்தான் செய்கின்றன.

எய்ட்ஸ் நோய் தொடர்பான சமூகத்தின் தடைகளை தகர்த்தெறிய நான் உதவுவேன்.

புதிதாக குழந்தைகளை எச்.ஐ.வி. வைரஸ் தாக்காமல் காத்துக்கொள்ள நான் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

இது குறித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், பாதிப்புக்குள்ளானவர்களை கேட்டுக்கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

Filed Under: சினி செய்திகள்பாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English