மடிக்கணனியை தவறவிட்ட அமிதாப்பச்சன்

இத்தாலியில் உள்ள புளோரென்ஸ் நகரில் இந்திய திரைப்பட விழா நடந்தது.

இதில் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார்.

இதற்காக அவர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்.

விழா முடிந்த பின்பு ஓட்டலை காலி செய்து விட்டு அமிதாப்பச்சன் மும்பை திரும்பினார்.

இங்கு வந்த பின்புதான் அவர் தனது மடிக்கணனியை ஓட்டலில் தவற விட்டு வந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.

உடனே அவர் இத்தாலியில் உள்ள தனது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை தொடர்பு கொண்டு தனது மடிக்கணனியை ஓட்டலில் தவறவிட்டது பற்றி கூறி உடனே அதை மீட்கும்படி கூறினார்.

இதையடுத்து தலைமை செயல் அதிகாரி அந்த ஒட்டலுக்கு விரைந்து சென்று அமிதாப்பச்சனின் மடிக்கணனியை பெற்றுக் கொண்டார்.

பின்னர் அதை பத்திரமாக மும்பை கொண்டு வந்தார்.

இது குறித்து இணையதளத்தில் அவர் கூறுகையில், இத்தாலி பட விழாவுக்கு சென்றபோது எனது மடிக்கணனியை தொலைத்து விட்டதையடுத்து மிகவும் வேதனை அடைந்தேன்.

பின்பு மடிக்கணனி எனது கைக்கு வந்ததும் தான் நிம்மதி பிறந்தது என்றும் இந்த வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

Filed Under: சினி செய்திகள்பாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English