சிறப்பு விருந்தினராக வருமாறு ரஜினிக்கு அமெரிக்கா அழைப்பு

அரசின் சிறப்பு விருந்தினராக வருகை தருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது.

12.12.12 அன்று பிறந்த நாள் கண்ட அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது அம்மாகாண அரசு.

மேரிலாண்ட் மாகாண அரசின் சார்பில் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் அம்மாகாணத்தின் துணை அமைச்சர் டொக்டர் ராஜன் நடராஜன்.

மேலும், வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு செல்லும் டொக்டர் ராஜன் சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவிக்க ஆவலுடன் இருப்பதாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகப் பணக்கார மாகாணம் என்று புகழப்படும் மேரிலாண்டின் ஆளுநர், அம்மாகாண மக்கள் சார்பில் இந்த வாழ்த்தையும் அழைப்பையும் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

டொக்டர் ராஜன், அமெரிக்க வரலாற்றிலேயே இப்படி ஒரு உயர் பதவியை வகிக்கும் முதல் இந்தியர் – தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்ரஜனி

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English