கவர்ச்சிகரமான ஆண்களில் ஹிருத்திக் முதலிடம்!

பிரித்தானியாவின் இணையதள நிறுவனமொன்று நடத்திய வாக்கெடுப்பில் ஆசிய ஆண்களில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கவர்ச்சிகரமானவர் என தெரிவு செய்யப்பட்டார்.

உலகில் உள்ள ஆசிய ஆண்களில் மிக கவர்ச்சிகரமானவர் யார்? என்ற தலைப்பில் லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு இணையதள நிறுவனம் வாக்கெடுப்பு நடத்தியது.

அதில், கவர்ச்சிகர ஆண் என்ற பட்டத்தை இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் பெற்றார்.

இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘அக்னிபத்’ என்ற இந்தி படம் சூப்பர் ஹிட்டாகி இவருக்கு புகழ் சேர்த்தது. அதன் மூலம் ரசிகர் பட்டாளம் பெருகியது.

இவருக்கு ஆசியா மட்டுமின்றி ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள அவரது ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.

இவருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் பாகிஸ்தான் பாடகரும், நடிகருமான அலி ஷாபர் உள்ளார்.

இவரை தொடர்ந்து நடிகர் சல்மான்கான் 3-வது இடத்தையும், நடிகர் ஷாகித் கபூர் 4-வது இடத்திலும் உள்ளனர். புதுமுக இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ரா 5-வது இடத்தையும், டி.வி. நடிகர் குஷால் தாண்டன் 6-வது இடத்தையும் பிடித்தனர்.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு 7-வது இடமே கிடைத்தது.

நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு 8-வது இடமும், ரன்பீர் சிங்குக்கு 9-வது இடமும் கிடைத்தது.

இவர்கள் தவிர டாப் 20 இடத்தில் இயக்குனர் ஷயான் மாலிக், பாடகர் ஜாய் சீன், நடிகர்கள் அக்ஷய் குமார், இம்ரான் காஷ்மி, இம்ரான்கான், அபிஷேக் பச்சன், சயீப் அலிகான், வருண் தவான், பாகிஸ்தான் பாடகர் அடிப் இஸ்லாம் ஆகியோரும் உள்ளனர்.

கவர்ச்சிகரமான ஆணாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹிருத்திக் ரோஷனுக்கு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

இது குறித்து ஹிருத்திக் ரோஷன் கூறும்போது, கவர்ச்சியாக இருக்கிறேனா என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

இருந்தாலும் பொதுமக்களின் முடிவுக்கு தலை வணங்கி அதை ஏற்றுக் கொள்கிறேன்.

இது எனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

இந்த அங்கீகாரம் வழங்கிய மேற்கத்திய ரசிகர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன் என்றார்.

Filed Under: சினி செய்திகள்பாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English