பாலிவுட்டிலிருந்து பஞ்சாபி மொழி படங்களுக்கு பாய்ந்தார் வீணா

பாலிவுட்டை தனது கவர்ச்சியால் கலக்கி வரும் நடிகை வீணா மாலிக், அடுத்து பஞ்சாபி மொழி படங்களில் நடிக்கிறார்.

பஞ்சாபி மொழியில் உருவாகும் “ஜாட்ஸ் இன் கோல்மால்” என்ற படத்தில் நடிக்கிறார் வீணா மாலிக்.

இப்படத்தின் நாயகனாக ஆர்யா பாபர் என்பவர் நடிக்கிறார்.

பஞ்சாபி மொழிப் படத்தில் நடிப்பதற்காக சண்டிகருக்குப் போன வீணா, பஞ்சாபின் அழகாலும் மக்களின் அன்பாலும் கவரப்பட்டு இப்போது எங்கு போனாலும் பஞ்சாப் புகழைப் பாடி வருகிறார்.

இந்த படத்திற்காக சேலை உடுத்தி வரும் வீணா, இது தன்னை வித்தியாசமான கோணத்தில் காட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தப் படத்தின் மூலம் பஞ்சாபியர்களின் மனதில் இடம் பெறுவேன் என்றும் “த சிட்ட தட் நெவர் ஸ்லீ்ப்ஸ்” உள்ளிட்ட படங்கள் மூலம் ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களையும் ஈர்ப்பேன் எனவும் வீணா தெரிவித்தார்.

Filed Under: சினி செய்திகள்பாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English