தொலைக்காட்சியிலிருந்து சூர்யா விலகியது ஏன்?

கொலிவுட்டின் முன்னணி நாயகனான நடிகர் சூர்யா விஜய் தொலைக்காட்சியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டார்.

அவருக்குப் பதில் பிரகாஷ் ராஜ் அந்த ஷோவை நடத்துகிறார். இதன் பின்னணி சூர்யா கால்ஷீட் பிரச்சினை இல்லை. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் விழுந்ததுதான் என்கிறார்கள்.

இந்த ஆண்டு அதிகம் கவனிக்கப்பட்ட மற்றும் விமர்சிக்கப்பட்ட டிவி ஷோக்களில் ஒன்று நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.

பார்வையாளர்களை எளிதாக ஈர்க்க எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்கிற ரேஞ்சுக்கு கேள்வி கேட்டு வந்தார் சூர்யா.

இந்நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்புதான் முடிந்தது. இதன் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என்று விஜய் தொலைக்காட்சி விளம்பரம் செய்து வந்தனர்.

இதிலும் சூர்யாதான் நிகழ்ச்சியை நடத்துவார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், அவருக்கு பதில் பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இது குறித்து சூர்யாவிடம் கேட்டபோது, என்னிடம் திகதியில்லை. அதனால்தான் நான் வெளியில் வந்துவிட்டேன். மற்றபடி கடந்த முறை ரொம்ப என்ஜாய் பண்ணி அந்த நிகழ்ச்சியை நடத்தினேன் என்றார்.

ஆனால் உண்மையில், இந்த நிகழ்ச்சி மூலம் சினிமா ரசிகர்களுக்கு சூர்யா போரடித்துவிட்டார் என்பதே உண்மை.

ஒரு பெரிய நாயகன் டிவியில் நேரடியாக தினமும் தோன்றிக் கொண்டே இருந்தால் மக்கள் மத்தியில் மவுசு குறைந்துவிடும் என்பது திரையுலகில் அடிக்கடி பேசப்படும் விடயம். அது புரிந்துதான் சூர்யா விலகிவிட்டார் என்கிறார்கள்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்சூர்யா

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English