மோகன்லால் மீது வழக்கு!

கேரளாவில் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி சினிமா மற்றும் தொலைக் காட்சிகளில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளை காட்டக்கூடாது.

மேலும் சிகரெட் பிடிப்பது போன்ற படங்கள் இடம்பெற்ற போஸ்டர்களையும் பொது இடங்களில் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது கேரள சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகை மைதிலி `மேட்னி’ என்ற சினிமாவில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்ற போஸ்டர்கள் திருவனந்தபுரத்தில் ஒட்டப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து நடிகை மைதிலி மீது கேரள சுகாதாரத் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் வருகிற மார்ச் மாதம் 18ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக மைதிலிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் மேஜர் ரவி இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்த `கர்மயோதா’ என்ற மலையாள சினிமா கேரளாவில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் மோகன்லால் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சி இடம் பெறுகிறது.

மேலும் மோகன்லால் சுருட்டு பிடிப்பது போன்ற போஸ்டரும் திருவனந்தபுரத்தில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே இந்த போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.

இதை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை நடிகர் மோகன்லால் மீது திருவனந்தபுரம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனையடுத்து நடிகர் மோகன்லால், இயக்குனர் மேஜர் ரவி ஆகியோர் மார்ச் மாதம் 18ம் திகதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Filed Under: சினி செய்திகள்பாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English