டிடிஎச் குறித்த குறும்படப் போட்டி: ரசிகர்களுக்கு கமல் அறிவிப்பு

விஸ்வரூபம் படத்தை டிடிஎச் மூலம் வெளியிட உள்ள நடிகர் கமல்ஹாசன் டிடிஎச் பற்றிய குறும்படப்போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.

விஸ்வரூபம் படத்தினை தயாரித்து இயக்கி நடித்துள்ள கமல் அதை டிடிஎச் மூலம் முதலில் வெளியிடுகிறார்.

இதற்கு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஒருபக்கம் கேபிள்டிவியில் இலவசமாக ஒளிபரப்புவோம் என்ற அச்சுறுத்தல் வேறு எழுந்துள்ளது.

இந்நிலையில் டிடிஎச் பற்றி மக்களுக்கு தெரிவிக்க குறும்படப் போட்டி ஒன்றை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

1 நிமிடம் மட்டும் ஓடக்கூடிய அளவில் குறும்படம் ஒன்றை தயாரித்து நேரடியாக அனுப்பும்படி கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

டிசம்பர் 31ம் திகதியை இந்த போட்டிக்கான கடைசி நாளாக அறிவித்துள்ளார்.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English