தீபிகாவுடன் போட்டி போடும் இலியானா

பாலிவுட் படத்தில் கதாநாயகி வேடத்தை கைப்பற்ற தீபிகா படுகோன், இலியானா இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழில் நண்பன், கேடி போன்ற படங்களில் நடித்திருப்பவர் இலியானா.

டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா, பர்பி படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார்.

படம் ஹிட் ஆனதையடுத்து தென்னிந்திய படங்களில் நடிப்பதை ஒதுக்கிவிட்டு இந்தி படங்களில் கவனம் செலுத்தப்போவதாக கூறினார்.

இந்நிலையில் தெலுங்கில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக இவர் கதாநாயகியாக நடித்த கிக் என்ற படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

ல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார், இப்படத்தில் கதாநாயகி வேடத்தில் நடிக்க இலியானா, தீபிகா படுகோன் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் நடித்த இலியானாவை மீண்டும் நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று சிலர் சிபாரிசு செய்துள்ளனர்.

இந்நிலையில் தீபிகா படுகோன்தான் இப்படத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று இன்னொரு தரப்பு கருத்து தெரிவித்திருக்கிறது.

இரு கதாநாயகிகளும் படத்தில் நடிப்பதற்கு தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளார்களாம். இதையடுத்து கிக் ரீமேக்கில் சல்மானுடன் நடிக்கும் வாய்ப்பு தீபிகாவுக்கு கிடைக்குமா? இலியானாவுக்கு வருமா? என்ற போட்டி எழுந்துள்ளது.

Filed Under: சினி செய்திகள்பாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English