கிசுகிசுக்களுக்கு பதிலளித்தார் அமலா பால்

தன்னை பற்றி பரவி வரும் கிசுகிசுக்களுக்கு பதிலளித்துள்ளார் அமலா பால்.

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அமலா பால், தற்போது கொலிவுட்டில் ஜெயம் ரவி, விஜய்யுடன் நடித்து கொண்டிருக்கிறார்.

தெலுங்கிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தனக்கு எதிரான கிசுகிசுக்களுக்கு பதில் அளித்து அமலாபால் கூறுகையில்,

நான் பெரிய நாயகர்களுடன் மட்டுமே ஜோடி சேருவேன் என்றும், பிரபல இயக்குனர்கள் படங்களில் தான் நடிப்பேன் என்றும் நிபந்தனைகள் விதிப்பதாக வதந்திகள் பரவியுள்ளன.

அப்படி எந்த நிர்ப்பந்தமும் செய்யவில்லை. கதாநாயகர்களை தெரிவு செய்வது இயக்குனர் மற்றும் பணம் போடும் தயாரிப்பாளர்கள் பொறுப்பு, அதில் நான் தலையிட்டது இல்லை.

கதை பிடித்து இருந்தால் புதுமுக நடிகருடன் கூட நடிப்பேன். நான் இப்போதுதான் சினிமாவுக்கு வந்தேன்.

25 படங்களில் நடித்து முடித்து இருந்தால் அது போன்று நிபந்தனைகள் வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Filed Under: சினி செய்திகள்சினி மினி

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English