ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் இந்தியில்!

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ படத்தை இந்தியில் வெளியிடுகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திரையுலகினரின் பாராட்டையும் விருதுகளையும் தட்டிய படம் ஸ்ரீ ராம ராஜ்ஜியம்.

இப்படத்தில் தெலுங்கு நட்சத்திர நாயகன் பாலகிருஷ்ணா, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தார்கள்.

பரபரப்பாக பேசப்பட்ட ‘சீதா’ பிராட்டி வேடத்தில் நயன்தாரா நடித்தார். தெலுங்கு பட இயக்குனர் பாபு இயக்கியுள்ள இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.

சமீபத்தில் ஸ்ரீ ராமராஜ்யம் படத்தின் பிரிமியர் ஷோ மும்பையில் நடந்தது.

இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்தியில் வெளியாகும் ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கும் என்று ‘சீதா’ நயன்தாரா எதிர்பார்க்கிறார்.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English