லட்சுமி மேனன் நடிக்கும் மஞ்சப்பை

கும்கி, சுந்தரபாண்டியன் வெற்றிப்பட நாயகி, மஞ்சப்பை என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இப்படத்தை களவாணி, வாகை சூட வா இயக்குனர் சற்குணத்தின் தம்பி நந்தகுமார் தயாரிக்கிறார்.

சற்குணத்திடம் உதவியாளராக இருந்த ராகவன் இயக்குகிறார்.

மேலும் படத்தில் விமல் நாயகனாக நடிக்க, ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2013ம் ஆண்டு பெப்ரவரியில் தொடங்கி நடைபெற இருக்கிறது.

படத்தின் கதை பிடித்துப்போனதால் தற்போதே லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை வாங்கி விட்டார்கள்.

சற்குணத்துடன் இரண்டு படங்களில் பணியாற்றி வெற்றியைக் கொடுத்த விமல், தற்போது நந்தகுமாருடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Filed Under: சினி செய்திகள்சினி மினி

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English