முதன்முறையாக டி.டி.ஹெச்சில் விஸ்வரூபம்!

உலக சினிமாவில் முதல் முறையாக ‘டிடிஹெச்’ முறையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இதுகுறித்து விஸ்வரூபம் குழு விடுத்துள்ள அறிக்கையில், முன்பதிவை தொடங்கிய இரண்டே நாட்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது விஸ்வரூபம்.

இதுவரை வந்த திரைப்படங்களுள் மிக அதிக ஆர்வத்துடன் அனைவரும் விரும்பி தேடுகிற படமாக விஸ்வரூபம் அமைந்துள்ளது.

ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ், சன், டிஷ் டிவி ஆகிய நிறுவனங்கள் தங்கள் டிடிஹெச்சில் விஸ்வரூபம் படத்தை வெளியிட உள்ளன.

திரையரங்குகளில் டிக்கெட்கள் எடுக்கும் சிரமமின்றி குடும்பத்துடன் படத்தின் முதன்முதல் ஒளிப்பரப்பை பார்த்து ரசிக்க ஒரு சிறந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.

இதன் முன்பதிவு விலையானது நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியானது ரசிகர்களின் தொலைகாட்சி பார்வையிடல் அனுபவத்தை மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

சென்னையில் நடந்த விஸ்வரூபம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன், இந்த படத்தை நான் என் சொந்தப் பணத்தில் இருந்து தான் தயாரித்துள்ளேன். இதை வெளியிடக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று பேசினார்.

மேலும் கமலின் இந்த வியாபார முடிவுக்கு தமிழ் திரையுலக பிரமுகர்கள் கே.ஆர், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பூர் சுப்ரமணியன், கலைப்புலி சேகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English