கடல் நாயகி துளசியின் பேட்டி

படப்பிடிப்பிற்கு முன்பே கார்த்திக் மகனும், நானும் ஒன்றாக நடித்து பயிற்சி பெற்றோம் என்கிறார் துளசி.

1980களில் முன்னணி நடிகையான ராதாவின் மகளும், கோ பட நாயகி கார்த்திகாவின் தங்கையுமான துளசி, கடல் படத்தில் அறிமுகமாகிறார்.

அவர் கூறுகையில், கடல் படத்தில் என்னை அறிமுகப்படுத்துவதற்காக இயக்குனர் மணிரத்னம் எனது அம்மாவிடம் போனில் பேசினார்.

அம்மா என்னிடம் மணிரத்னத்தின் படத்தில் நடிக்கிறாயா என கேட்ட போது, நம்பவே முடியவில்லை.

எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனடியாக நடிக்க சம்மதித்து விட்டேன். இதையடுத்து நடிப்பு பயிற்சி மற்றும் சில நுணுக்கங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் போது கவுதமும், நானும் எங்களது வேடம்பற்றி நடித்து பயிற்சி பெற்றோம். இது கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்துகொள்ள உதவியது.

மணிரத்னம் இயக்கத்தில் பணியாற்றியது அதிசயமாகவும், ஆசிர்வாதமாகவும் இருந்தது. அவர் காட்டிய அன்பால் படப்பிடிப்பில் இருப்பது போன்ற உணர்வு இல்லாமல் சவுகரியமாக உணர்ந்தேன்.

கமெரா முன் என்னை யதார்த்தமாகவே இருக்கச் சொன்னார், எனது நடிப்பு விஷயத்தில் அம்மாவோ, அக்கா கார்த்திகாவோ தலையிடவில்லை. முழுமையாக எனது சுதந்திரத்துக்கு விட்டுவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Filed Under: சினி செய்திகள்சினி மினி

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English