தனிமை பிடித்திருக்கிறது: பிரபுதேவா

ரமலத்துடன் தொடர்பில்லை, நயன்தாராவை மறந்து விட்டேன் என்று பிரபுதேவா கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது பாலிவுட் பட பணிகளில் இருக்கிறேன்.

இந்த வேலைகள் காரணமாக தான் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டேன்.

ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன.

நடிகர்–நடிகைகள் தெரிவு, மேக்கப் டெஸ்ட், உடையலங்காரத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது.

அதையெல்லாம் சென்னையில் இருந்து கொண்டு செய்ய முடியாது.

என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால், தொழில் நன்றாகவே நடக்கிறது.

நயன்தாரா விடயத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நடந்தது எல்லாமே நன்மைக்காக என்று புரிந்து கொண்டேன்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட உயர்வு, தாழ்வு, சந்தோஷம், வலி எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம். கடவுள் இந்த வழியை விரும்பியிருக்கிறார்.

நயன்தாராவுடனான உறவு முடிந்து போன விடயம். நான் அதை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

இப்போது நான் தனிமையில் இருந்தாலும் இது, எனக்கு பிடித்து இருக்கிறது என்றார்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English