ரஜினியும், பேரரசும்!

சிவகாசி, திருப்பாச்சி, திருப்பதி என பல படங்களை இயக்கியவர் பேரரசு.

இவர் கடைசியாக இயக்கிய படம் திருத்தணி. இப்படம் தோல்வியடைந்ததால், அடுத்து யாரை வைத்து படம் இயக்குவது என்ற குழப்பத்தில் இருந்தார்.

இந்நிலையில் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ரஜினிக்கே என்னிடம் கதை உள்ளது, படத்திற்கு செங்கோட்டை என பெயர் வைத்துள்ளேன் என்று கூறினார்.

இந்நிலையில் இச்செய்தி ரஜினி வட்டாரத்துக்கு சென்ற போது, கோபமாகி விட்டார்களாம்.

எந்த படத்தையும், யாரை வைத்து வேண்டுமானாலும் இயக்கலாம், எதற்காக ரஜினி பேரை இழுக்கிறார் என்று கொதிப்படைந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே ரஜினி தரப்பிலிருந்து ஒருவர், இந்த மாதிரி ரஜினி சார் பெயரை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று பேரரசுவை எச்சரித்துள்ளாராம்.

உடனே பேரரசு, இப்படியொரு செய்தி வெளியானது எனக்கே தெரியாது, நானும் மீடியாக்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளாராம்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்ரஜனி

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English