டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவம் திரைப்படமாகிறது!

‘நிஷா’ என்ற தெலுங்கு படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ரமணா கட்டம் இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் கிரண்குமார், அனன்யா, கல்யாண், நரசிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜெ. தன்ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோல்டி சன்னி, பிரணய் குமார் ஆகியோர் இசையமைக்கின்றனர்.

ஓடும் பஸ்சில் டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டு, பின்னர் மரணமடைந்த சம்பவத்தை, ‘நிஷா’ படத்தின் கிளைக்கதையாக வைக்க இயக்குனர் ரமணா கட்டம் முடிவெடுத்துள்ளார்.

உணர்வு பூர்வமானதொரு துன்பியல் சம்பவத்தை காட்சிப்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் டெல்லி மாணவிக்கு நேர்ந்த, அந்த கோரச் சம்பவத்தை படமாக்க நான் விரும்பவில்லை.

நமது நாட்டில் நடைபெறும் இதை போன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவங்களின் மூலம், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவும் தான் இந்த கதையை நிஷா திரைப்படத்தில் கிளைக்கதையாக உருவாக்கியுள்ளேன் என்றார்.

இந்த கிளைக்கதையை தவிர கமர்ஷியல் சினிமாவுக்கு தேவையான அத்தனை அம்சங்களுடனும் கூடிய மூலக்கதையும் இப்படத்தில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English