ரோபாவாக மாறிய பவர்ஸ்டார்!

கொலிவுட்டில் நண்பன் படத்தையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் புதிய படம் ஐ.

அந்நியனைத் தொடர்ந்து, விக்ரம் மாறுபட்ட அவதாரம் எடுக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக “மதராசப்பட்டினம்” எமி ஜாக்சன் நடிக்கிறார்.

படத்தின் முதல் பாதியில், ஒல்லியான தோற்றத்தில் நடிக்கும் விக்ரமை, இரண்டாம் பாதியில் பயில்வான் போன்ற உடல்கட்டு கொண்டவராக மாற்றி நடிக்க வைக்கிறார் ஷங்கர்.

இதற்கிடையே இப்படத்தில், கொமெடிக்கும் அதிக காட்சிகள் ஒதுக்கியுள்ளார்.

சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் இருவரும், செம கலாட்டா செய்கிறார்களாம். இதில், சீனிவாசனை ரோபோ கெட்டப்புக்கே மாற்றியுள்ளார்.

எந்திரன் படத்தில், கொமெடியாக சொல்ல முடியாமல் போன சில காட்சிகளை, இப்படத்தில் இணைத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போகிறாராம் ஷங்கர்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English