வரலட்சுமி தெலுங்கில் நடிக்கிறாரா?

மனம்கொத்தி பறவை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் வரலட்சுமி.

போடாபோடி என்ற படத்தின் மூலம் கொலிவுட்டில் அறிமுகமானார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி.

இதன் பின் தற்போது விஷாலுடன் மதகஜராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் போதிய படவாய்ப்புகள் வராததால், தெலுங்கில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் முதல் படமாக மனம்கொத்தி பறவையின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க போவதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் இத்தகவலை மறுத்துள்ளார் வரலட்சுமி.

இதுகுறித்து டுவிட்டரில் கூறுகையில், நான் மனம் கொத்திப்பறவை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஆனால் அந்தச் செய்தி ஒரு தவறான வதந்தி. நான் அந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவில்லை, அதுகுறித்து இதுவரை யாரும் என்னிடம் பேசவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Filed Under: சினி செய்திகள்சினி மினி

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English