மகளை அறிமுகப்படுத்திய அர்ஜுன்!

நடிகர் அர்ஜுன், தன் மகள் ஐஸ்வர்யாவை திரையுலகிற்கு நேற்று முதன்முறையாக அறிமுகம் செய்து வைத்தார்.

ஐஸ்வர்யா முதன்முறையாக பட்டத்து யானை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்க, மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.

படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்து வந்தாலும் ஊடகங்களுக்கு தன் மகளை அறிமுகப்படுத்தி வைத்தார் அர்ஜுன்.

அப்போது அவர் பேசியதாவது, சினிமாவில் 30 வருடங்களாக இருக்கிறேன்.

பணம், புகழ், நண்பர்கள், சந்தோஷம் எல்லாமே கிடைத்த இந்த சினிமாவில் என் மகளை அறிமுகப்படுத்துகிறேன்.

இதனை கேள்விப்பட்டு பலர் பாராட்டினர். இன்னும் சிலர் ஆண் என்றால் பரவாயில்லை. பெண்ணாக இருக்கிறதே? பரவாயில்லையா என்றனர்.

நல்லது, கெட்டது நாம் நடந்து கொள்ளும் முறையில்தான் எல்லா துறையிலும் இருக்கிறது.

என் பெண்ணை பையன் மாதிரிதான் வளர்த்து உள்ளேன். பயம் இல்லை என்று அவர்களிடம் கூறினேன்.

சினிமா என் வீடு, நானே உள்ளே போக பயந்தால் மற்றவர்கள் எப்படி வருவார்கள். குடும்பத்துடன், மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தி உள்ளேன்.

பூபதி பாண்டியன் திறமையான இயக்குனர். கதை பிடித்து இருந்தது.

விஷால் நாயகனாக நடிப்பது இன்னொரு மகிழ்ச்சி. ஏற்கனவே நான் இயக்கிய வேதம் படத்தில் விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

சுறுசுறுப்பானவர், எனது மகளுக்கும் நடிக்க பிடித்துள்ளது என அர்ஜுன் கூறினார்.

பேட்டியின்போது நடிகர் விஷால், இயக்குனர் பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English