கமல்-தியேட்டர் அதிபர்கள் மோதல் முற்றியது வட இந்தியாவில். தியேட்டர் ரிலீஸ் இல்லை!!

கமலில் விஸ்வரூபம் DTHல் ஒரு ஷோ ரிலீஸ் என்ற முயற்சியை எடுத்ததிலிருந்து பலவேறு வகையான போராட்டங்களை சந்தித்து வருகிறது.

தென்னிந்தியாவில் பலத்த எதிர்ப்புகளையும் தாண்டி ஓரளவு தான் நினைத்தபடி DTHல் 10ம் தேதியும், தியேட்டர்களில் 11ம் தேதியும் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகிறது. ஆந்திராவில் பிரபல இயக்குனர் தாசரி நாரயண ராவ் விஸ்வரூபத்தை எடுத்து ரிலீஸ் செய்கிறார்.

தியேட்டரின் வசூல் DTHல் ஒரு ஷோ போடுவதால் குறைந்து விடாது என இவர்கள் நம்புகிறார்கள் என்ற கமல், வட இந்தியாவின் ரிலீஸ் நிலையைப் பற்றி கேட்டபோது அதில் சிக்கல்கள் இருப்பதை ஒப்புக்கொண்டார்.

ஒரு மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்வதாய் குடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியதால் தான் நினைத்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கிவில்லை எனவும் அதனால் வட இந்தியாவில் 11ம் தேதி தியேட்டர் ரிலீஸ் இருக்காது என்றார்.

ஆனால் திட்டமிட்டபடி வட இந்தியாவிலும் 10ம் தேதி இரவு DTH ஷோவில் திரையிடப்படும் என உறுதி செய்தார்.

தென்னிந்தியாவின் தியேட்டர் வசூலைப் பார்த்துவிட்டு வட இந்திய தியேட்டர்களும் சற்று லேட்டானாலும் விஸ்வரூபத்தை திரையிட வருவார்கள் என நம்பிக்கையிருப்பதாய் தெரிவித்தார் கமல்ஹாசன்.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English