ஒரு நாள் முன்பாகவே வெளியாகும் ‘அலெக்ஸ் பாண்டியன்’

கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடிக்க, சுராஜ் இயக்கியிருக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஒரு நாள் முன்பாகவே அதாவது ஜனவரி 11ஆம் தேதியே வெளியாகும் என்று அப்படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள அலெக்ஸ் பாண்டியன், படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கும் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 12ஆம் தேதி வெளியாக இருந்த இப்படத்தை ஜனவரி 11ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் ஒரே சமயத்தில் தெலுங்கிலும் வெளியாகிறது.

Filed Under: கார்த்திசினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English