நாளை வெளியாகின்றது கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்

கார்த்தி நடிக்கும் அலெக்ஸ்பாண்டியன் இதுவரை வெளிவந்த கார்த்தி படங்களிலேயே அதிகமான திரையரங்குகளில் வெளிவருகிறது. சுமார் 650 திரையரங்குகளில் இப்படம் நாளை வெளியாகிறது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும், சூரியா நடித்த ஏழாம் அறிவுக்கு பின்னர் மிக அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும்  இப்படம் என்பதால் அவர்களும் இப்படத்தின் விளம்பர யுக்திகளை கவனிப்பதற்கு தனியாக குழு ஒன்றை அமைத்துள்ளனர். அவர்களும் திறம்பட வேலைகளை செய்துவருகின்றனர்.

இப்படம் வெளியாகும் அணைத்து திரை அரங்குகளிலும் முன்பதிவு வேகமாக நடப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்கு முன்பதிவு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Filed Under: கார்த்திசினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English