சிக்கலில்சிக்கலில் கமல், அஜித், சிம்பு, நயன்தாரா

தமிழ் திரையுலகமே திரண்டு மத்திய அரசாங்கத்தின் 12.36 சதவிகித சேவை வரியை எதிர்த்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நிகழ்த்தினர். பெருவாரியான நடிக நடிகையர் திரண்டு இந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

சரத்குமார் தலைமையில் துவங்கிய இக்கூட்டம் காலை துவங்கி மாலை 5 மணிவரை சென்றது. இக்கூட்டத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் சுமார் மூன்று மணிநேரம் இருந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். அவர் பேசுகையில், இப்படிப்பட்ட வரிகள் மேலும் மேலும் கருப்பு பணத்தை பதுக்க வழி செய்யுமே அன்றி வெளிக்கொண்டு வர உதவாது.

இந்த போராட்டத்தில் காலை முதற்கொண்டு மாலை வரை பொறுமையாக இருந்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார் இளையதளபதி விஜய். மேலும் பங்கு பெற்ற நட்சத்திரங்கள் ராதா ரவி, விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜீவா, விஷால், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, சத்யராஜ், வாகை சந்திரசேகர், ராதிகா, ஸ்ரீப்ரியா, ரம்யா கிருஷ்ணன், பிரசன்னா, சினேகா, ரோகினி, சுஹாசினி, ரேகா, சுகன்யா, நமீதா, மும்தாஜ், கைக்கு மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் மேடையில் அமர்ந்து இருந்தனர்.

இந்த போராட்த்திற்கு சின்னத்திரை நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். ஆனால் தமிழ் திரையுலகின் முன்னணி நடிக நடிகையர் பலர் கலந்து கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது. கமலஹாசன், அஜித், சிம்பு, தனுஷ், ஆர்யா, வடிவேலு மற்றும் சந்தானம் நயன்தாரா, அனுஷ்கா, அசின், சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால், திரிஷா, அஞ்சலி, ஸ்ருதிஹாசன், அமலா பால், லட்சுமி மேனன், லட்சுமி ராய் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கு பெறவில்லை.

போராட்டத்தில் அணைத்து நடிக நடிகையரும் பங்கு பெற வேண்டும் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் ஏற்கனவே சுற்றிக்கை அனுபியுள்ளது குறிபிடத்தக்கது. மாலை 5 மணியளவில் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் வந்து அனைவருக்கும் ஜூஸ் கொடுத்து போராட்டத்தை முடித்துவைத்தார்.

Filed Under: சினி செய்திகள்சினி மினி

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply
If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English