விஸ்வரூபம் ஜனவரி 25ம் திகதி வெளியீடு – கமல் அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த சில நாட்களாக நடந்த பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் உலக நாயகன். விஸ்வரூபம் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னர் DTH தொழில் நுட்பத்தில் வீடுகளுக்கு நேராக ஒளிபரப்பும் முறையில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு ஆதராவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன. கடந்த சில நாட்களில் பல்வேறு செய்திகள் தமிழ் திரை உலகினரையும் தமிழ்நாட்டு மக்களையும் குழப்பியடித்துகொண்டிருந்தன. திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பால் விஸ்வரூபத்திற்கு திரையரங்கு கிடைப்பதில் பிரச்சனை எழுந்தது. இதனால் எதிர்பார்த்தபடி விஸ்வரூபம் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகள் கிடைக்காமல் போயின. இதையடுத்து திரையரங்கு உரிமையாளகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவற்றுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஸ்வரூபம் என் தயாரிப்பு, என்னுடையது. யாரும் இதை என்னிடமிருந்து பறிக்கவோ தடுக்கவோ முடியாது.

இது எப்பொழுது திரைக்கு வரும் என்பதை முடிவு செய்யவேண்டியது நான், வேறு யாரும் அல்ல. அதனால் நான் அறவிப்பு வெளியிடும் வரை திகதியை யாரும் நம்பவேண்டாம் என்று கூறினார்.  இதையடுத்து இன்று வெளியிட்ட அறிக்கையில் விஸ்வரூபம் திரைப்படம் 25ம் திகதி திரைக்கு வரும் என்றும், 500 திரையரங்குகளுக்கு குறையாமல் இப்படம் தமிழகம் முழுவதும் வெளிவரும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த கடுமையான போராட்டத்தின் பொது தனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள தெரிவித்தார்.

Filed Under: கமல்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English