ஆதிபகவனில் 5 விதமான கெட்டப்பில் ஜெயம்ரவி

ல மாதங்களாக படப்பிடிப்பிலேயே இருந்து வந்த அமீரின் ‘ஆதிபகவன்’ படம் இப்போது தான் பல பிரச்சனைகளைத் தாண்டி ரிலீஸுக்கு ரெடியாகியிருக்கிறது.

இந்தப்படத்தால் புதிதாக வந்த ஒன்றிரெண்டு பட வாய்ப்புகளைக் கூட விட்டுவிட்டு அப்செட்டில் இருந்த ஜெயம்ரவிக்கு படம் ரிலீஸ் என்ற செய்திதான் இப்போதைக்கு அவருக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கிறதாம்.

இந்தப்படத்துக்காக நான் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன், என்று சொல்லும் அவர் முதல்முறையாக இந்தப்படத்தில் தான் 5 விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம்.

இண்டர்நேஷனல் அளவில் செயல்படும் ஒரு மாஃபியா கும்பலைப்பற்றித்தான் இந்தப்படத்தின் திரைக்கதையாக்கியிருக்கிறார் டைரக்டர் அமீர்.

மாஃபியா என்றாலே ஆக்‌ஷன் இருக்கும் தானே..? படத்தில் கிட்டத்தட்ட 5 சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சண்டைக்காட்சியுமே எனக்கு சவாலாக இருந்தது என்று சொல்லும் ஜெயம்ரவி இந்தப்படம் ஃபுல் அண்ட் ஃபுல் பாங்காக்கில் ஷூட்டிங் நடத்தப்பட்ட முழு நீள ஆக்‌ஷன் படம் என்று கூறியிருக்கிறார்.

படத்தில் வரும் 5 கெட்டப்புகளில் ஒரு கெட்டப்பில் திருநங்கையாகவும் அதுபோக இன்னும் 4 வித்தியாசமான கெட்டப்புகளிலும் அதாவது மொத்தம் 5 வேடங்களில் ஜெயம்ரவி நடித்திருக்கிறாராம்.

ஆதிபகவான் போலவே விஷால் நடித்த ‘சமர்’ படமும் ஒரு மாஃபியா கும்பலைப்பற்றிய கதைதான் என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிட விஷயம்.

Filed Under: கொலிவூட்சினி செய்திகள்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English