சர்ச்சையைக் கிளப்பியுள்ள சென்னை எக்ஸ்பிரஸ்

தொந்தியும், தொப்பையும், கழுத்தில் உத்ராட்ச கொட்டையும், நெற்றியில் பட்டையும், விரித்து போட்ட தலைமுடியும் என தமிழர்களின் கெட்டப்பே இப்படித்தான் என்று போஸ்டரிலேயே சர்ச்சையைக் கிளப்பிய ஹிந்திப்படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ஸ்டோரி பற்றிய புதிய தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன.

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் முக்கியமான கதை நகர்வே ஹீரோ ஷாருக்கான் தானாம். வடமாநிலத்தைச் சேர்ந்த அவர் ஒரு தமிழனாக மாறுகிற முயற்சியில் எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் படத்தின் கதையாம். அதற்காக அவர் படத்தில் வேட்டி, சட்டையெல்லாம் அணிந்து புதுவிதமான கெட்டப்பில் வருகிறார்.

அதாவது டெல்லியிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஷாருக்கான் பயணம் செய்கிறார்.
படத்தில் தமிழ் பெண்ணாக வரும் தீபிகாவும் அதே ரயிலில் பயணிக்கின்றனர்.

இருவரும் சந்தித்து பேசத் தொடங்கும் போது தீபிகாவுக்கு ஹிந்தி தெரியாமல் தமிழில் பேச, ஷாருக்கானுக்கு தமிழ் பேசத் தெரியாமல் ஹிந்தியில் பேச, இருவருமே மொழி தெரியாமல் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.

சூழ்நிலை இப்படி இருக்கும்போது இவ்வளவு அழகான தமிழ்ப்பெண்ணான தீபிகா படுகோனை எப்படியாவது காதலித்து திருமணம் செய்து விட வேண்டும் என்ற ஆசையில் ஷாருக்கான் தமிழ் கலாச்சாரத்தின் படி வேட்டி, சட்டை அணிந்து தமிழில் பேசி தமிழனாகவே மாறி தீபிகாவை திருமணம் செய்கிறாரான் இல்லையா? என்பதுதான் படத்தின் திரைக்கதையாம்.

முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்ப இந்தப்படத்தை எடுத்து வருகிறார்கள். படத்தில் நடிகர் சத்யராஜ் தீபிகாவின் அப்பாவாகவும் ஆச்சி மனோரமா அத்தையாகவும் நடிக்கிறார்களாம். மேலும் இதில் ஏராளமான தமிழ்நடிகர்களே முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

படத்தை வரும் அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

Filed Under: சினி செய்திகள்பாலிவூட்

About the Author:

RSSComments (0)

Trackback URL

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்..
 

English Bamini Tamil-English